7வது ஐபிஎல் போட்டிகள் அபுதாபிலா?

ipl

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், 7வது ஐபிஎல் போட்டிகள் அபுதாபி அல்லது வங்கதேசத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 7வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது, இதற்கான ஏலம் பிப்ரவரி 12ம் திகதி நடக்கிறது.

இதற்கிடையே ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மே வரை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிகள் அபுதாபி அல்லது வங்கதேசத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் நடக்கும் டுவென்டி–20 உலக கிண்ணத் தொடர் ஏப்ரல் 6ல் முடிகிறது. அப்போது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இங்கு இருப்பர் என்பதால், அடுத்த சில நாட்களில் அதாவது 9ம் திகதி பிரிமியர் தொடரின் தொடக்க விழா மற்றும் சில சுற்று போட்டிகளை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்து ஒரு சில சுற்று போட்டிகள், அபுதாபியில் நடக்கும் என்றும் நாக்–அவுட் போட்டிளை இந்தியாவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கு அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர், டிவி ஔிபரப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

 

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு