மகன் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படும் கார்த்திக்!

karthik

ரஜினி, தவிர வேறு எந்த நடிகர்களுமே தங்களது ஒரிஜினல் கெட்டப்பை பப்ளிக்கில் தைரியமாக காட்டியதில்லை. குறிப்பாக சில நடிகர்-நடிகைகள், பொது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்றாலே மணிக்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்ட பிறகுதான் வெளியில் முகம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு யூத்புல்லாக இமேஜை பாதுகாத்து வருகிறார்கள்.

ஆனால், அஜீத் மட்டும் இந்த விசயத்தில் மாறுபட்டவராக இருக்கிறார். மங்காத்தாவில் தனது தலையில் இருக்கும் நரை முடி கெட்டப்பில் அப்படியே நடித்தவர், பின்னர் ஆரம்பம், வீரம் படங்கள் வரை அதை தொடர்ந்தார். அது ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும கிடைத்தது.

அதனால், இப்போது அஜீத் நடித்த சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கும் ஆர்வம் சில இளவட்ட நடிகர்களுக்கே ஏற்பட்டுள்ள நிலையில், நவரச நாயகன் கார்த்திக் அனேகன் படத்தில் அதே கெட்டப்பில் நடித்து வருகிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கும் இந்த படத்ததில் கார்த்திக்கின் மெயின் வில்லனாம். அதனால், மணிரத்னத்தின் ராவணன் படத்தை விட இந்த படம் தனக்கு பெரிய ரீ-என்ட்ரியை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் கார்த்திக்.

மேலும், இப்போது தனுசுக்கு வில்லனாக நடிப்பவருக்கு அடுத்து தனது மகன் கெளதம் நடிக்கும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறதாம். குறிப்பாக, மகனுடனும் வில்லனாக மோத வேண்டும் என்பது கார்த்திக்கின் பெரிய ஆசையாக உள்ளதாம். அதனால் அனேகனுக்குப்பிறகு அதற்கான முயற்சியில் இறங்க திட்டமிட்டுள்ளாராம் நவரச நாயகன்.

By True Tamil

ஜனவரி 30, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு