தொடர் தோல்விகளால் துவன்டுபோன இந்திய அணி

New-Zealand

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய அணி 0–3 என தொடரை ஏற்கனவே இழந்தது.

இரு அணிகள் மோதும் முக்கியதுவம் இல்லாத கடைசி ஒருநாள் போட்டி, ஹாமில்டனின் இன்று நடக்கிறது.

இதில் ஐந்தாவது முறையாக டொஸ் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 303 ஓட்டங்கள் எடுத்தது. நீஷம் 34 ஓட்டங்களுடனும், ரான்கி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணிக்கு ஆரோன் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தனர். புவேனேஷ்வர், ஷமி கோஹ்லி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் சொதப்பவே, கோஹ்லி மட்டும் தாக்குபிடித்து 82 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து வந்த அஷ்வின்(7), ரவிந்திர ஜடேஜா(5) ஏமாற்றினர்.

தனியாக போராடிய அணித்தலைவர் டோனி(47) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

பின்வரிசை வீரர்கள் ஏமாற்ற இந்திய அணி 49.4 ஓவரில் 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

By True Tamil

ஜனவரி 31, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு