மதுரை, பிப்.1 – மு.க. அழகிரி எம்.பி.யின் ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டிலி ருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர். கோபி. இவர் மு.க.அழகிரி எம்.பி.யின் ஆதரவாளர்.
எஸ்.ஆர் கோபிக்கு அவனியாபுரம் அருகே பைபாஸ் ரோட்டில் 2 பண்ணை வீடுகள் உள்ளன. இங்கு ஆயுதங்களுடன் அடியாட்கள் தங்கி இருப்பதாக அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங் குன்றம் கூடுதல் கண்காணிப்பாளர் சசிமோகன், இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மற்றும் போலீஸார், எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு இருந்த ஒரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கையில் ஏர் கன் துப்பாக்கி மற்றும் தோட்டத்தில் பயன்படுத்தக்கூடிய கத்தி, மண்வெட்டி, கடப்பாறை போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றினர். அதன் பின்பு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 3 கார்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீஸார் கைப் பற்றினர். அதனைத் தொடர்ந்து போலீஸார் மற்றொரு பண்ணை வீட்டில் சோதனை நடத்தச் சென்றனர்.
இதுபற்றிய தகவல் எஸ்ஸார் கோபியின் வக்கீல்களுக்கு கிடைத்தது. உடனே வக்கீல்கள் குட்டி என்ற ராஜரத்தினம், தனபால் உள்பட 4 வக்கீல்கள் பண்ணை வீட்டுக்கு விரைந்து சென்றனர். பண்ணை வீட்டுக்குள் சோதனை நடத்த முயன்ற போலீஸாரை வக்கீல்கள் தடுத்தனர். வீட் டில் சோதனை நடத்த அனுமதி சான்று பெற்றுள்ளீர்களா என்று கூறி போலீஸா ருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அந்த வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். போலீ ஸாருடன் 4 வக்கீல்களும் உடன் சென்றனர். போலீஸார் ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
![]()

