வோட்கா குடித்து ஆயுளை இழக்கும் ரஷ்யர்கள் அதிர்ச்சி ரிபோர்ட்

russian-Vodka

ரஷ்யாவின் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் 55 வயதுக்குள்ளாகவே இறந்து விடுகின்றனர். இதற்கு ‘வோட்கா’ எனப்படும் மதுவை அதிகமாக குடிப்பதே காரணம் என ஐ.நா. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரஷ்ய புற்றுநோய் மையம், மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து மது அருந்தும் பழக்கத்தை பற்றி 10 வருடங்களாக ரஷ்யாவின் மூன்று முக்கிய நகரங்களில் சுமார் 1,51,000 இளைஞர்களிடம் ஆராய்ச்சி நடத்தியது. இதில் வாரத்திற்கு மூன்று லிற்றருக்கும் அதிகமாக வோட்கா அருந்திய சுமார் 8000 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“ரஷ்ய மக்கள் எப்போதுமே அதிகமாக மது அருந்துகிறார்கள். பெரும்பாலானோர் கடுமையான குளிர் நிலவுவதால் தாங்கள் மது அருந்துவதாக கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் வெறும் சாக்குபோக்கு தான். ரஷ்யாவின் இந்த வாழ்க்கைமுறை மாற வேண்டும்” என்றார்.

குறைந்த சராசரி ஆயுட்காலம் கொண்ட 50 நாடுகளில் ஒரு நாடாக உள்ள ரஷ்யாவில் இன்னும் சராசரி ஆயுட்காலம் 64 வயது என்ற அளவிலேயே உள்ளது. ரஷ்யாவில் “வோட்கா” குடிப்பதால் 55 வயதுக்குள்ளாவே இறக்கும் விகிதம் 2004ல் 37 சதவீதமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த கடந்த 2006ல் ரஷ்ய அரசு வோட்கா மீதான வரியை உயர்த்தி விற்பனை செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தற்போது 25 சதவீதமாக குறைந்துள்ளது.

வோட்கா அருந்தியபின் ஏற்படும் விபத்துகள், வன்முறை, தற்கொலை, கல்லீரல் மற்றும் தொண்டை புற்றுநோய், காசநோய், நிமோனியாவால் அதிக இறப்புகள் ஏற்படுவதாகவும், ரஷ்ய அரசு மதுபானம் மற்றும் புகையிலை விற்பனை கொள்கைகளில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் ரஷ்யாவுக்கு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு