இது கதிர்வேலன் காதல் படத்துக்காக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Idhu-Kathirvelan-Kadhal

சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் முகவர் செண்பகமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தை தயாரித்துள்ளோம். இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பம் செய்தேன். இதுவரை அந்த விண்ணப்பம் பரிசீலிக்கவில்லை.

எனவே, ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில், தமிழ் அறிஞர்கள், திரைப்பட விமர்சகர்கள் ஆகியோர் உறுப்பினராக கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, எங்களது திரைப்படத்தை பார்க்கவும், அதன்பின்னர் கேளிக்கை வரிவிலக்கு பெற உகந்த திரைப்படம்தானா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை வருகிற 7–ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், இந்த வழக்கில் வணிக வரித்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அவர்களுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு