துபாய் சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், கொச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மின் வீட்டில் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாம்.
அப்போது மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் இருவரும் ஒருவரது கழுத்தில் ஒருவர் மாலை மாற்றி ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த சிறப்பு திருமணத்தை சட்டப்படி சார்பதிவாளர் பதிவு செய்தார்.
அவர் கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் இருவரும் கையெழுத்து போட்டனர். இந்நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமண சடங்குகள், திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ் சர்ச்சில், நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் மீரா ஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.
![]()

