பெங்களூர், பிப். 12 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர்.
முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது. ரிச்சர்டு மேட்லி ஏலத்தை நடத்தினார். இன்று 219 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதில் 149 வீரர்கள் விலைபோகவில்லை. அதிகபட்சமாக யுவராஜ் சிங் ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது.
அடுத்தப்படியாக தினேஷ் கார்த்தி ரூ. 12.5 கோடிக்கு போனார். அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்தது. குறைந்த விலையான ரூ.30 லட்சத்திற்கு பிராண்டன் டெய்லர் (சன் ரைசர்ஸ்), சாமுவேல் (சென்னை சூப்பர் கிங்ஸ்), மேட் ஹென்றி (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் ஏலம் போனார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய ஏலத்திற்காக ரூ. 18 கோடியே 10 லட்சம் செலவு செய்துள்ளது. இந்த அணி 8 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் மோகித் சர்மா மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்.
டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 51 கோடியே 40 லட்சம் செலவு செய்து, 13 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் 8 இந்திய வீரர்கள். 5 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 29 கோடியே 30 லட்சம் செலவு செய்து, 5 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 10 வீரர்களை பெற்றுள்ளது. அதிகபட்சமாக மிட்செல் ஜான்சனை ரூ. 6.5 கோடிக்கு எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 29 கோடி செலவு செய்து 5 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 8 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. காலிசை அதிகபட்சமாக ரூ. 5.5 கோடிக்கு எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ரூ. 15 கோடியே 80 லட்சம் செலவு செய்துள்ளது. இந்த அணி 5 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக ரூ.5 கோடி கொடுத்து மைக் ஹசேவை எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 9 கோடியே 4 லட்சம் செலவு செய்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித்தை அதிகபட்சமாக 4 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த அணி 6 வீரர்களை இன்று தேர்வு செய்ததில் அபிஷேக் நாயர் மட்டும் இந்தியாவைச் சேர்ந்தவர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 28 கோடியே 70 லட்சம் செலவு செய்து 9 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. அதிகபட்சமாக யுவராஜ் சிங்கை ரூ. 14 கோடி கொடுத்து எடுத்துள்ளது. இதில் 4 பேர் இந்திய வீரர்கள் ஆவர்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ் ரூ. 29 கோடியே 60 லட்சம் செலவு செய்து 5 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 11 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.
![]()

