dilshan-sangakkara-jayaward

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவு இன்று முடிந்தது . உலகளாவிய ரீதியில் 514 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் முன்னணி வீரர்கள் யாரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மெத்தியூஸ், அஜந்த மெண்டிஸ், திலகரட்ன தில்சான், குசல் பெரேரா ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

எனினும் திஸ்ஸர பெரேரா மற்றும் முரளிதரன் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்

குறிப்பாக இதில் முத்தையா முரளிதரன் முன்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் நிர்வாகத்தினால் ஒரு கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் ஐபிஎல் நிர்வாகத்தினர் இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காமைக்கான காரணத்தை வெளியிடவில்லை.

Loading