உலகின் “ஒளிரும் இளைஞர்கள்” பட்டியலில் 23 இந்தியர்கள்: போர்ப்ஸ் பத்திரிக்கை!

forbes

அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள “உலகின் ஒளிரும் இளைஞர்கள்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேர் இடம்பிடித்துள்ளனர்.

அந்த பத்திரிகை 3ஆவது ஆண்டாக வெளியிட்டுள்ள, 450 பேர் கொண்ட அந்த பட்டியலில் நிதியியல், ஊடகம், விளையாட்டு மற்றும் கல்வி உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த, 30 வயதுக்கு உள்பட்ட திறமை வாய்ந்த இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நிதித்துறையில் திறம்பெற்ற கணேஷ் பெத்தனபட்லா, முதலீட்டு வர்த்தக மேலாண்மையில் ஈடுபட்டுள்ள ரூஷப் தோஷி, தொழில்துறையைச் சேர்ந்த நைல் மேத்தா, இணைய வர்த்தகத்தை எளிமையாக்கும் மென்பொருளை உருவாக்கிய சஹீஸ் லாவிங்கியா, கல்வி மையங்கள் அமைத்து வரும் கிருஷ்ணா ராம்குமார் உள்பட 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் பாப் பாடகர்கள் ஜஸ்டின் பைபர், மிலே ஸைரஸ், டெய்லர் ஸ்விஃப்ட், டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் மலாலா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

“யாரையெல்லாம் கவனிக்கிறாங்க”

By True Tamil

டிசம்பர் 21, 2013
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு