நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய டைரக்டர் சேகர் கம்முலா

Nayanthara's 'Nee Enge En Anbe' trailer

சென்னை,பிப்.15 வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டு மொழிகளிலும் நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தை சேகர் கமுல்லா இயக்குகிறார். லீடர், ஆனந்த், ஹப்பி டேய்ஸ் என தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சேகருக்கு தமிழில் இதுதான் முதல் படம். அதிரடியான சண்டைக்காட்சிகள், அமர்க்களமான கவர்ச்சிப் பாடல்கள் என்று பயணித்துக்கொண்டிருந்த தெலுங்கு சினிமாவில், எந்தவித தெலுங்கு வண்ணங்களும் இல்லாமல், மரியாதையான படங்களை எடுத்து வெற்றிப் பெற்றவர் சேகர் கமுலா, நீ எங்கே என் அன்பே படத்தின் மூலம் முதல் முறையாக ரீமேக் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சேகர் கமுலா, இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர் வைபவ் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது, இந்த படத்தில் நயன் தாரா கர்ப்பிணியாக நடிக்க தயங்கினார் என்று கூறப்பட்டதே? என்று கேட்டனர், அதற்கு பதில் அளித்த இயக்குநர், “வித்யாபாலன் இந்திப்படத்துல கர்ப்பிணியா நடிச்சிருந்தாங்க. ஆனால் இதில் நயன்தாரா அப்படி நடிக்கல. நானே அப்படி வைக்க வேண்டாம்னு நினைச்சேன். ஒரு பெண் தன் கணவரை காணவில்லை என்று ஐதராபாத் சிட்டி முழுக்க தேடி அலைகிற காட்சிகளே கனமாக இருக்கும். அவர் கர்ப்பிணியாக இருந்தால் தான் அந்த கனம் கூடுதலா இருக்கும் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன்.” என்றார். என்றார் சேகர் கமுல்லா.

நிகழ்ச்சியில் பேசிய வைபவ், “தெலுங்கு சினிமாவில் சேகர் கமுலா சார் பெரிய இயக்குநர். அவரிடம் நான் பல முறை வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அவரே ஒரு முறை என்னை அழைத்து இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது சந்தோஷமாக இருந்தது. பிறகு யார் ஹீரோயின் என்று கேட்டேன், நயன்தாரா என்றார்கள், அப்போது இன்னும் சந்தோஷமாக இருந்தது. நயன்தாராவுடன் நடித்தது இனிமையான அனுபவமாக இருந்தது.” என்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு