Budget 2014, Income tax slabs unchanged; cars to be cheaper

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2%. ஆனால் அதற்கு முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் சராசரி வளர்ச்சி 5.9% மட்டுமே. சென்னை- பெங்களூர் இடையே தொழில் மையம் அமைக்கப்பட இருக்கிறது.

இதேபோல் பெங்களூர்- மும்பை, கொல்கத்தா- அமிர்தசரஸ் இடையேயும் தொழில் மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து மாணவர்கள் பெறும் கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.

வாகனத் துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரியும் 12%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படுகிறது. மேலும் வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் அமலுக்கு வரும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 புதிய அணு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக அணு உலை நிறுவப்பட இருக்கிறது. நடப்பாண்டில் 296 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இலக்கை விஞ்சி ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம் உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading