தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் நிதிஷ் குமார்

Nitish-Kumar

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறியது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக பிராந்திய கட்சிகளான சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. விரைவில் இந்த கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் கூறுகையில், “நாங்கள் ஒருமித்த கருத்துடைய புரிதலின் அடிப்படையிலான புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடது சாரிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் திரும்ப மாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு