ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

ஸ்ரீதேவிக்கு பிரபலங்களின் இரங்கல்!

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். – கமல்

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், இச்செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. நான் என் நல்ல தோழியை இழந்துவிட்டேன். சினிமா உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விவேக்- இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது! ஆயினும் நம் நெஞ்சில் எப்போதும் நிழலாடும்!

ஓ.பி.எஸ்- மிகச்சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு மிகவும் துரதிருஷ்டவசமானது என்று துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை தலைமுறைகள் கடந்தும் அனைவரையும் கவர்ந்தது என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்றாம் பிறை, லம்ஹா போன்ற படங்கள் மூலம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். மேலும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .

ஸ்ரீதேவி நமது இதயங்களில் வாழ்கிறார் – டிவிட்டரில் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

 


By True Tamil

பிப்ரவரி 25, 2018
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு