ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 24-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், டீ காக்கும் களமிறங்கினர். கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாகூர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி மன்னன் டீ வில்லர்ஸ்[68], டீ காக்குடன்[53] இணைந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இருவரும் அரை சதம் அடித்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் குவித்தது. சென்னையனின் சார்பில் பிராவோ, தாஹிர் மற்றும் தாகூர் தல 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பின்னர் 206 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னையனிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது வாட்சன் 7 ரன்களிலும், ரெய்னா 11 ரன்களிலும், பில்லிங்ஸ் 9 ரன்களிலும் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ராயிடு மற்றும் கேப்டன் தோனி பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை தும்சம் செய்தனர். 19.4 ஓவர்களில் 5 இழந்து 207 குவித்து சென்னை அணி வெற்றிபெற்றது. ராயுடு 53 பந்துகளில் 82 ரன்களும் தோனி 34 பந்துகளில் 70 ரன்களும் குவித்தனர். சிறப்பாக விளையாடிய தல தோனி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு