புனேவில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்சை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ராகனே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 204 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டர் வாட்சன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை பறக்க விட்டார். இது இந்த ஐ.பி.எல்லின் 2-வது சதமாகும். நேற்று மொகாலியில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் ஷ்ரேயஸ் கோபல் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட்களை கைப்பற்றினார்.

205 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே விக்கட்களை பறிகொடுத்தது.

அதிரடியாக விளையாடி சதமடித்த ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Loading