ஹாலிவுட் இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!

Christopher Nolan Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்ததாகவும் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் சமீபத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, `விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் சந்தித்திருக்கிறார்.

மெமன்ட்டோ, டார்க் நைட் ட்ரையாலஜி, இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்காக அந்த மன்னிப்பு என்றால், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் படத்தை கமல் தியேட்டரில் பார்க்காமல் பிறகு டிஜிட்டலாக பார்த்தாராம், அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததாக தெரிவித்தது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு