ஊழல் பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால்! அலறிய தலைவர்கள்!

arvind-kejriwal

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி, நரேந்திர மோடி, கபில் சிபில், ஆ. ராசா, மாயாவதி, முலாயம் சிங் யாதவ், ப.சிதம்பரம் ஆகியோர் இடம் பெற்ற பட்டியலை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “மக்கள் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை விரும்புகின்றனர்.
மக்களிடம்அவர்களது இமேஜை பெரிதாக்க ரூ. 500 கோடி செலவு செய்கின்றனர். பிறகு  அதனை மக்களிடம் இருந்து திரும்ப பெறுவார்கள். பிறகு எப்படி அவர்களால் நல்ல அரசை கொடுக்க முடியும்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் செய்தி சேனல் தகவலின்படி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல் தலைவர்கள்:

நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, சுஷில் குமார் ஷிண்டே, பிரபுல் படேல், பி.எஸ். எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, கே.டி. குமாரசாமி, ப. சிதம்பரம், அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், ஆ. ராசா, தருண் கோகய், கபில் சிபல், மாயாவதி, முலாயம் சிங்யாதவ், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், பரூக் அப்துல்லா, நவீன் ஜிண்டால்

By True Tamil

ஜனவரி 31, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு