சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மொகாலி, பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 16-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடியான கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் சிறப்பான துவக்கம் கொடுத்தனர் . சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்த ஆண்டின் முதல் சதத்தை பதிவு செய்தார். இதில் 11 சிக்ஸர்களும் அடக்கம். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கட்டை இழந்து 193 குவித்தது.

194 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஜோடி ஏமாற்றமளித்தது. பின்னர் வந்த மனிஷ் மற்றும் கேப்டன்
வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்ததும் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை.

சதம் அடித்த பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு