டெல்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 22-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்சை வீழ்த்தியத்தியது.
டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பிர் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தேர்வில் இன்று நிறைய மாற்றங்களை செய்திருந்தது. அதுபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சில மாற்றங்களை செய்திருந்தது. முதல் 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் இன்று அணியில் இடம்பெறவில்லை.
முதலில் காளமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே விக்கட்களை இழந்து தடுமாறியது பின்னர் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் மயங் அகர்வால் சிறிது நேரம் தாக்கு பிடித்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 34 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி சார்பில் பிளான்கட் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களையும், போல்ட், அவெஸ் கான் தல 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக காம்பிர், பிரித்திவி ஷா ஆகியோர் களமிறங்கினர். காம்பிர் 9 ரன்களிலும், ஷா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 9 ரன்களிலும், ரிஷப பண்ட 6 ஆட்டமிழக்க மறுமுனையில் சிரேயஸ் ஐயர் வெற்றிக்காக கடைசி வரை போராடி 57 ரன்கள் குவித்து கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
சிறப்பாக பந்துவீசிய 2 விக்கெட்களை கைப்பற்றிய அங்கித் ராஜ்பூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
![]()

