சென்னை சூப்பர் கிங்ஸ்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

சென்னை சூப்பர் கிங்ஸ்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மொகாலி, பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 12-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடியான கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் மிகவும் அதிரடியாக ஆடி 8 ஓவர்களில் 100 ரன்களை கடந்தனர். சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 63 ரன்களும் ராகுல் 37 ரன்களும் குவித்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டை இழந்து 197 குவித்தது.

198 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி ஏமாற்றமளித்தது. பின்னர் வந்த ராயீடு மற்றும் கேப்டன் தோனி சிறப்பாக விளையாடியும் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை.

பஞ்சாப் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு