இன்று நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 2-வது போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்ஸை வீழ்த்தியத்தியது.
டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கட்டை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காம்பிர் 55 ரன்களும், பண்ட் 28 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் முஜீப், மோஹித் சர்மா தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.
பின்னர் 167 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ராகுல் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் அரை சதம் அடித்தார் இதுவே ஐ.பி.எல் டி20 போட்டியின் அதிவேக அரைசதமாகும். இதற்க்கு முன் யூசப் பதான், சுனில் நரேன் 15 பந்துகளில் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது அதனை இன்று ராகுல் முறியடித்தார்.
மற்றொரு பேட்ச்மன் கருண் நாயர் அரை சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். 18.5 ஓவரில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
டெல்லி அணியின் சார்பில் போல்ட், கிறிஸ்டியன், மோரிஸ், திவேதிய தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர். ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
![]()


