இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 3-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கட்களை இழந்து 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ வில்லர்ஸ் 44 ரன்களும், மெக்குல்லம் 43 ரன்களும், விராட் கோலி 31 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் வினய்குமார், ராணா தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் 177 என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நரேன் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் அரை சதம் அடித்து தனது விக்கட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 35 ரன்களும், ராணா 31 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார். 18.5 ஓவரில் 6 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சார்பில் போல்ட், வோக்ஸ் 3 விக்கட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கட்களையும் வீழ்த்தினர். சுனில் நரேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Loading