அனில் கும்ளே விலகினாரா? விளக்கப்பட்டாரா?

அனில் கும்ளே விலகினாரா? விளக்கப்பட்டாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜம்போ திடீரென விலகினார். இதற்கு கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் அனில் கும்ளே, இவரது ஒரு ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிகிறது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை, இவர் பதவியில் தொடர்வார் என, இந்திய கிரிக்கெட் போர்டு பி.சி.சி.ஐ அறிவித்தது.

இதற்கு கேப்டன் கோஹ்லி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வௌியாகின. இவர்களுக்கு இடையிலான உறவு மோசமான நிலைக்கு சென்று விட்டதால், சமரசம் செய்து வைக்க முயன்ற, சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

அனில் கும்ளே விலகினாரா? விளக்கப்பட்டாரா?

இதனிடையே, ஐந்து ஒருநாள், ஒரு ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிளம்பிச் சென்றது. முதல் போட்டி வரும் 23 ம் தேதி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கவுள்ளது.

அனில் கும்ளே, இந்திய வீரர்களுடன் செல்லவில்லை. இவர் தலைவராக உள்ள ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்கும் கும்ளே, 23ம் தேதி நடக்கும் வருடாந்திர கூட்டத்திலும் பங்கேற்க, லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்பட்டது.

இவரது பயிற்சியின் கீழ் இந்தியா அணி 17 போட்டியில், 12ல் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ், நியூஸ்லாண்ட், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரிலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு