மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவை ஒட்டி மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் தினந்தோறும் சுந்தரேஸ்வரரும் – மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சிக்கு பாட்டாபிஷேகம் கடந்த 25ம் தேதியும், திக்விஜய நிகழ்ச்சி 26ம் தேதியும் நடைபெற்றது.

மதுரையில் சித்திரை திருவிழாவந்து 12 நாட்கள் நடைபெறும். சித்திரை திருவிழாவின் 10-ம் நாள் சுமங்கலி பெண்களுக்கான பிரசித்திபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் நாள்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக துவங்கியுள்ளது. தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். கீழ மாசி வீதியிலிருந்து கிளம்பிய புறப்பட்ட தேர் மாசி வீதிகள் வழியாக அசைந்தாடி சென்று கொண்டிருக்கிறது. இதில் தமிழகம் தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தினை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று மாலை அழகர்மலைக் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறும்….!

[images cols=”three” lightbox=”true”]
[image link=”4236″ image=”4236″]
[image link=”4235″ image=”4235″]
[image link=”4234″ image=”4234″]
[image link=”4233″ image=”4233″]
[image link=”4232″ image=”4232″]
[image link=”4231″ image=”4231″]
[image link=”4229″ image=”4229″]
[image link=”4228″ image=”4228″]
[image link=”4230″ image=”4230″]
[/images]

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு