வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

வெளியானது மெர்க்குரி படத்தின் ட்ரைலர்!

இறைவி படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

இப்படத்தில் வசனங்களே கிடையாதாம். சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டோண் பென்ச் ஃபிலிம்ஸ் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ப்ரோமோஷன் பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகுமாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு