
▶
கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் Mr.சந்திரமௌலி படத்தின் இன்று டிரெய்லர் வெளியானது .
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலக்ஷ்மி நடித்துள்ளனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.
மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
![]()
