ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல் 2018 6-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ்சை வீழ்த்தியது.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கௌதம் காம்பிர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவரின் முடிவில் 5 விக்கட்களை இழந்து 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரகானே 49 ரன்கள் குவித்தார். நதீம் அதிகபட்சமாக 2 விக்கட்களை வீழ்த்தினர்.

போட்டியின் நடுவில் மழை குறுக்கிட்டதால் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு DLS முறைப்படி 6 ஓவர்களுக்கு 71 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 6 ஓவர்களின் முடிவில் 4 விக்கட்களை இழந்து 60 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Loading