ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசை கணித்த நடிகர் ரஜினிகாந்த்!

Super star Rajinikanth

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் கடந்த 47 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் மாணவர்கள் என பல்வேறு  தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாள்களாக அவதிப்பட்டுப் போராடிக்கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை நேரில் சந்திக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் நாளை தூத்துக்குடிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு