ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் காலா. இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வோண்டர்பார் ஃபிலிம்ஸ மூலம் தயாரித்துள்ளார். இது ரஜினிகாந்தின் 164-வது படமாம்!

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு வில்லன் கதாபாத்திரமாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், ஸ்டில்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை சென்சாருக்கு படக்குழு அனுப்பியது. அப்போது படத்தில் சில வசனங்களுக்கு மியுட், மற்றும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 14 காட்சிகளுக்கு கட் சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆனால் 14 கட், ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது தவறு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு