ரஜினி தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியது கடந்த ஒரு வாரமாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்த்தும் ஆதரித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். 
இதனிடைய, இன்று மாலை 6 மணிக்கு காலா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில் ரஜினி முரட்டு மீசையுடன் மிகவும் கம்பிரமாக சீப்பில் அமர்ந்துள்ளார். காலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது அனைத்து விதமான ஊடகங்களிலும் ட்ரெண்டாகியுள்ளது.
இதனால் தன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்.
இத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்குகிறார் நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
![]()


