கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

இன்று பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 8-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 155 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 47 ரன்களும், கேப்டன் அஸ்வின் 33 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கட்களையும் வாஷிங்டன் சுந்தர், கெஜரொலியா தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் 156 என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர் டீ-காக் 45 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த டீ வில்லர்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து தனது விக்கட்டை பறிகொடுத்தார். இறுதியில் 19.3 ஓவரில் 6 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். பந்துவீச்சில் பஞ்சாப் அணி கேப்டன் 2 விக்கட்களை வீழ்த்தினார்.

அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டீ வில்லர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு