பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 19-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்சை வீழ்த்தியத்தியது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் காளமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 174 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பண்ட 85 ரன்களும், சிரேயஸ் ஐயர் 52 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் சாகல் 2 விக்கட்களை கைப்பற்றினர்.
பின்னர் 175 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அதிரடி மன்னன் டீ வில்லர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சார்பில் 90 ரன்கள் அடித்து கடைசிவரை வெற்றிக்கு உறுதுணையாக டீ வில்லர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
![]()

