சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் இருவரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து படம் குறித்து ஆலோசித்துள்ளனர். முன்று பேரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் இணையவுள்ளார். இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்று அதிகார்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தின் நடிகையை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
![]()


