மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 7-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1 விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கட்களை இழந்து 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெவின் லீவிஸ் 29 ரன்கள் குவித்தார் பந்துவீச்சில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டன்லக்கே, சித்தார்த் கவுல் தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் 147 என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார். பின்னர் அடுத்து அடுத்து விக்கட்கள் விழ ஒரு கட்டத்தில் போட்டி மும்பை பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைபட கடைசி ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா சிக்சர் அடிக்க போட்டி பரபரப்பானது.  கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது.

சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் நான்கு ஓவர்கள் வீசி 13 கொடுத்து 1 விக்கட்டையும் கைப்பற்றினார். இதில் 18 டாட் பந்துகள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு