மும்பை, வான்கடே மைதானத்தில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 23-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியத்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 23-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியத்தியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி, பின்னா் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரா்களான தவானும் கேப்டன் வில்லியம்சனும் களம் இறங்கினர். பும்ராவின் முதல் ஓவரிலேயே வில்லியம்சன் 2 பவுண்டரிகளை அடித்து தங்கள் அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். மறுபுறம் தவானுக்கு 5 ரன்கள் (6 பந்துகள் ), விருத்திமான் சஹா 0 (2 பந்துகள் ) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இவா்களுக்கு அடுத்து மனிஷ் பாண்டே 16 ரன்கள் (11பந்துகள் ) கேப்டன் வில்லியம்சனுடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில், இவா்களின் முயற்சியை ஹர்திக் பாண்ட்யா கனவாக்கினார். பின்னா் ஐதராபாத்தின் ஆல் ரவுண்டா் ஷகிப் அல்-ஹசன் களத்தில் பிரேவேசிக்க சூர்யகுமார் கையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவா்களுக்கு அடுத்து அதிரடி மன்னா் யூசுப் பதான் இறங்கி விளையாடி வந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் வில்லியம்சன் 29 (21 பந்துகள்) கீப்பா் கையில் கேட்ச் கொடுத்து ரசிகா்களை ஏமாற்றினார். பின்னா் களமிறங்கிய முஹமது நபி 17 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதில் இருந்து ஐதராபாத் அணியில் அடுத்தடுத்து வந்த வீரா்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்.

மறுபுறம் யூசுப் பதான் மட்டும் தன் விக்கெட்டை கொடுக்காமல் தாக்குபிடித்தார். ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்ததால் பேட்டை சுழற்சிய யூசுப் பதான் சிக்சர் ஒன்றை பறக்கவிட்டார். சோர்ந்து போயிருந்த ஐதராபாத் ரசிகர்களுக்கு லேசன ஆறுதலை இந்த சிக்சர் அளித்தது. ஆனால், அடுத்த பந்திலேயே யூசுப் பதான் (29 ரன்கள், 33 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது.

Loading