கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 10-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்சை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 138 ரன்கள் குவித்தது. போட்டியின் நடுவில் மழை குறிக்கிட்டதால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது அந்த அணியில் அதிகபட்சமாக லின் 49 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் புவனேஷ்குமார் 3 விக்கட்களையும் ஸ்டாண்லகே, ஷாகிப் அல் ஹாசன் தல 2 விக்கட்களை கைப்பற்றினர்.

பின்னர் 139 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக ஆடி அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சார்பில் சுனில் நரேன் 2 விக்கட்களை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் பில்லி ஸ்டாண்லகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Loading