இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 4-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்ஸை வீழ்த்தியத்தியது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கட்களை இழந்து 125 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சன்சூ சாம்சன் 49 ரன்கள் குவித்தார் பந்துவீச்சில் சாகிப் அல் ஹாசன், சித்தார்த் கவுல் தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.
பின்னர் 127 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தவான் அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 73 ரன்கள் வெற்றிக்கு வழிவகுத்தார். ஐதராபாத் அணி15.5 ஓவரில் 1 விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன் 36 ரன்கள் குவித்தார்.
சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
#SRH #RR #IPL #IPL2018 #SRHvRR #SRHvRR
![]()


