கதறி அழுது மன்னிப்பு கேட்ட எஸ்.வி. சேகர்!

கதறி அழுது மன்னிப்பு கேட்ட எஸ்.வி. சேகர்!

சென்னை: பத்திரிகையாளர்களை விமர்சித்த நடிகர் எஸ்.வி.சேகர், ஏற்கனவே அறிக்கை வாயிலாக மன்னிப்பு கோரினார். தொடர்ந்து வீடியோ வடிவில் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

என் மீது அன்பு கொண்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக, பேஸ்புக்கில் படிக்காமல் தவறுதலாக ஒரு பதிவை பார்வர்டு செய்து விட்டேன். தவறு என்று தெரிந்தும் அதை உடனடியாக நீக்கிவிட்டேன். இதுதொடர்பாக, பத்திரிக்கை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பை கேட்டுவிட்டேன்.

யாரையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து அரசியல் செய்யும் நிலையில் நான் இல்லை. யாரையும் ஒருமையிலோ, மரியாதை குறைவாகவோ நடத்தியது கிடையாது. இந்தச்சூழலில் என்னுடைய தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கிறேன். இதை அனைத்து தமிழக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்வி.சேகர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு