வனமகன் – ஒரு பார்வை!

வனமகன் - ஒரு பார்வை!

ஜெயம்’ ரவி, அறிமுக கதாநாயகி சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ளது ‘வனமகன்’ திரைப்படம், இந்த படத்தின் சாதக பாதகங்ககளை தற்போது பார்ப்போம்.

அந்தமான் தீவுக்கு தனி ,விமானத்தில் சுற்றுலா வரும் பணக்கார நாயகி சாய்ஷாவும் , அவரது நண்பர்களும் , காட்டில் காட்டிலாக்கா அதிகாரிகளின் கட்டுப்பாட்டைத்தாண்டி காட்டிற்குள் காரில் உலா வரும் போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில் சிக்கியது கதாநாயகன் ஜெயம் ரவி, அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட அங்கு ஜெயம் ரவி செய்த அட்டகாசத்தால் மருத்துவமனை நிர்வாகம் கதாநாயகியின் வீட்டிற்கே ஜெயம் ரவியை கொண்டு வந்து விட்டுவிடுகிறது, அவர்கள் வீட்டில் ரவி செய்யும் சேட்டை நம் வயிறுகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

அதிலும் குறிப்பாக தம்பி ராமையாவிற்கும் ஜெயம் ரவிக்கும் இடையேயான காம்பினேஷன் அருமை, நாம் இப்போது பின்பற்றி வரும் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை ஷாயிஷா ஜெயம் ரவிக்கு சொல்லிக்கொடுக்க அவரும் பவ்யமாக கற்றுக்கொள்கிறார் இதனிடையே காட்டுவாசியான ஜெயம் ரவி உண்மையில் யார்? அவர்களின் உறவுகள் எங்குள்ளது? ஏன் அவர் தனிமை படுத்தப்பட்டார்? மீண்டும் அவர்களின் கூட்டம் ஒன்று சேர்கிறதா? கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்று சேர்கிறார்களா? என்பது தான் மீதி கதை.

ஜெயம்’ ரவி வெற்றிக்காக கடுமையாக உழைக்க கூடிய நடிகன் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். கதாநாயகி ஷாயிஷா இவர் இப்படத்தில் தான் அறிமுகமாக, ஓரளவிற்கு நடிப்பு வர முயற்சி செய்துள்ளார்.இவர்களை தவிர தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய், வருண் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிக சரியாக செய்துமுடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், இது அவருக்கு 50 ஆவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. இறுதியாக இப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், சில பல குறைகள் இருந்தாலும் காட்டுவாசி மனிதர்களின் உன்னதத்தையும் உயரிய குணத்தையும் மிக நேர்த்தியாக பேசியிருக்கும் வனமகன் – வசீகரன் .

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு