விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான நடிகர் என்று கூறலாம். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதி அடுத்து அருண் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு நாயகியாக அஞ்சலியும் நடிக்க இருக்கிறாராம். ஆனால் இந்த இரண்டு தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இம்மாதம் முதல் தேதியில் இருந்து புது படங்கள் எதையும் திரையுலகம் வெளியிடாமல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும், மற்ற 3 சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது சினிமா துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி ‘ஜூங்கா’ படப்பிடிப்பை மீண்டும் துவங்கும்படி படக்குழுவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, விஜய் சேதுபதி, சயீஷா உட்பட படக்குழு தற்போது போர்சுகல் சென்றுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் இந்த முடிவால் திரையுலகம் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு