அம்மாவை சந்தித்த எம்.எல்.ஏக்களுக்கு ஆப்புவைத்த கட்சி தலைமை!

 DMDK heads for Split as 1 More MLA Meets CM

மார்ச்01: சென்னை கோட்டையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு நேற்று சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பான மனு ஒன்றை கொடுத்தார்.

இந்நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ. கலையரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்.

இதேபோல், திருத்தணி தொகுதி தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.அருண் சுப்பிரமணியனும், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பான மனுவை கொடுத்தார். இந்த நிலையில், தே.மு.தி.க.வில் அவர் வகித்து வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

தே.மு.தி.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த மு.அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., அவர் வகித்து வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து 27-2-2014 முதல் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு