அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

emplo

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது.

பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது தொடர்பாக அதிகமானோர் படிக்கும் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

மேலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-ன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு