மார்ச்05: உலகில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு 212 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை (108) விட அதிகமாகும்.
இப்பட்டியலில் பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் குண்டுவெடிப்புக்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. இது 2012 ஐ விட அதிகமாகும்.
இதேவேளை உலகின் 75% வீதமான குண்டுவெடிப்புக்கள் பாகிஸ்தான், ஈராக், இந்தியா ஆகிய நாடுகளில் தான் நடபெறுகிறதாம் எனவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
![]()

