மே 23, இலங்கையில பிரச்சினை…..! விடுதலைப்புலிகள் அழிப்பு! கூடவே இன அழிப்பும்தான். இப்படி நடக்கயில இந்த கலைஞர் அரசும் மத்தியில இருந்த காங்கிரஸ் அரசும் விரல் சூப்பி விளையாடிட்டு இருந்துச்சு!
சரி இது போகட்டும்.
ஜெயா கட்சி என்ன பண்ணுச்சு! திண்ணையில ஒக்காந்து நல்ல வேலை நம்ம ஆட்சியில இல்ல! இருந்திருந்தா நம்ம இதுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்துச்சு!
ஆட்சிக்கு வந்த உடனே புலிகளுக்கு ஆதரவா தீர்மானம் போட்டாங்க! ஆனா எதுவும் நடைமுறைக்கு வரல! (இந்த இடத்துல) அது அனாவசியம்!
வைகோ மட்டும் போராடுவோம், போராடுவோம்னு கொந்தளிச்சி கொந்தளிச்சி மத்திய பிரதேசம் வரைக்கும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு போய் சத்தம் போட்டாரு! பாராளுமன்றத்துக்குள கத்துறதே கேட்க கூடாதுன்னு காது ரெண்டையும் பொத்துனாப்புல
கட்டியிருந்த மோகன் சாருக்கு கேட்கவே இல்லை!
வட மாநில அரசியல் கட்சிகளெல்லாம் சேர்ந்துகிட்டு இது நமக்கு தேவை இல்லாதது ஜி, அவங்க வேற நம்ம வேறன்னு தமிழ் நாட்டை பிரிச்சு பாத்துச்சு!
அமெரிக்கா உள்ளிட்ட சில பெரிய பஞ்சாயத்துக்கார நாடுகள் தம்பி நீங்க செய்யறது தப்பு மாதிரி தெரியுது! பெரிய குண்டு போடதீங்க, வேனும்ன சின்னதா போடுங்கன்னு ராஜபக்ஷேகிட்ட பேப்பர்லயே அறிக்கை விட்டு பேசுனுச்சுங்க……
இப்ப என்னடான்னா!? கலைஞர் சொல்றாரு அம்மா எதுவுமே செய்யல நான்தான் செஞ்சேன்னு!
அம்மா தரப்புல நான்தான் செஞ்சேன்னு சொல்றங்க!
இவங்க ரெண்டு பேரையும் ஒத்தைய ரெட்டையா போட்டு அன்னைய அர்ஜன்ட்டுக்கு 200ம் 500ம் வாங்கிகிட்டு ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கிற மக்களுக்கு இது தெரியுதோ இல்லையோ….. நல்லது பேசின வைகோவை தோக்கடிச்சிபுட்டானுக…………
இப்பவும் இவரு மட்டும்தான் உண்மையா பேசிகிட்டு இருக்காரு.! இது ஒரு புறமிருக்க வைகோவிற்கு மந்திரி பதவி குடுக்கலாம்னு இருந்த பிஜேபி இனிமே அத குடுப்பாங்களான்னு எதிர்பார்க்க முடியாது! அவனவன் எடுக்கற முடிவு நமக்கு சாதகமாயிருதுன்னு மோடி ஜாலியாயிருவாப்ல!
இப்ப எனக்கு என்ன சந்தேகம்ன்னா?
ராஜபக்சே வருவாப்லயா மாட்டப்லயா?
வந்தா வைகோ என்ன சொல்லுவாரு? எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் என்ன செய்யப் போவது என்ன?
ராஜபக்சே வரலன்னா எப்பிடி அவருகிட்ட சமாதானம் பேசமுடியும்?
சமாதானம் பேசலைன்னாலும் சார்க் நாடுகளை அழைக்கும் போது பக்சேவை மட்டும் அலைக்கமா விடமுடியுமா? விட என்னவாகும்?
![]()

