இந்தியா முழுமைக்கும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி!

nij

மே18, இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இருப்பினும், ஒட்டுமொத்த வாக்கு விகிதத்தில் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட முன்னிலையில் உள்ளனர். நடந்துமுடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,241 வேட்பாளர்களில் 3,234 பேர் சுயேச்சைகள்.

இதில் அஸ்ஸாமின் கோக்ரஜார் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான நாபகுமார் சரானியாவும், கேரளத்தின் இடுக்கி தொகுதியில் போட்டியிட்ட ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் இன்னஸன்ட் ஆகிய 3 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். கோக்ரஜார் தொகுதியில் போட்டியிட்ட சரானியா தனது போட்டியாளரும், மற்றொரு சுயேச்சை வேட்பாளருமான உர்காவ் குவாரா பிரம்மாவை அதிகபட்சமாக 3,55,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இடுக்கி தொகுதியில் போட்டியிட்ட ஜோய்ஸ் ஜார்ஜ், காங்கிரஸ் வேட்பாளரான டீன் குரியகோஷை 50,542 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சாலக்குடி தொகுதியில் போட்டியிட்ட இன்னஸன்ட், ஆச்சரியமூட்டும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரான பி.சி.சாக்கோவை 13,884 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றி பெற்ற 3 சுயேச்சை வேட்பாளர்களும் ஒட்டுமொத்தமாக 1.67 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். இது மக்களவைத் தேர்தலில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் 3 சதவிகிதமாகும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு