இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

srilankan-attacks

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னா பின்னப்படுத்திய சிங்கள வெறியர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அவரைத் தடுத்து நிறுத்திய தோடு, அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் காவலர் வந்து ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி இங்குள்ள மத்திய மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை என குறை கூறியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு