உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு! தென்கொரியா கல்வி நிறுவனம் முதலிடம்!

iit

மே2,
உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை “டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் 87ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் “டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ வாரப் பத்திரிகை, உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டவற்றில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2014ஆம் ஆண்டுக்கான பட்டியலை வியாழக்கிழமை (02.05.2014) வெளியிட்டுள்ளது.

அதில் குவாஹாட்டி ஐ.ஐ.டி. நிறுவனம், 87வது இடத்தை பிடித்துள்ளது.

“டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த எந்த கல்வி நிறுவனமும் இதுவரை முதல் 100 இடங்களுக்குள் வந்தது கிடையாது.

குவாஹாட்டி ஐ.ஐ.டி.யுடன் சேர்ந்து, போர்ச்சுகல் நாட்டின் “நியூ யூனிவர்சிட்டி ஆஃப் லிஸ்பன்’ மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் “யூனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட்ர்ன் சிட்னி’ ஆகியவையும் 87ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

தென்கொரியா நாட்டின் “போஹாங் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனம் தொடர்ந்து 3ஆவது முறையாக இந்தாண்டும் முதலிடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் “இகோல் பாலிடெக்னிக் ஃபெடராலி டி லூசன்’ கல்வி நிறுவனம் 2ஆவது இடமும், தென்கொரியா நாட்டின் மற்றொரு கல்வி நிறுவனமான “கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனம் 3ஆவது இடமும் பெற்றுள்ளன என்று டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வாரப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு