என்னுடைய ஆதரவு மோடிக்குத்தான் – நாகார்ஜுனா

Actor Nagarjuna meets Narendra Modi

மார்ச் 25, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று சந்தித்துப் பேசினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “”இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணமும் எனக்கு இல்லை.

மோடி பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்ததைப் போல் மற்ற மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து மோடி டுவிட்டர் சமூக வலைதளத்தில் குறிப்பிடும்போது, “”நாகார்ஜுனாவுடனான சந்திப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.

அவர் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு