ஐ.நா.வில் பதிலடி கொடுப்போம்! இலங்கை அமைச்சர்!

SL-friendly proposal likely at UNHRC: Minister

இலங்கை, பிப்ரவரி 22: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தமது நட்பு நாடுகள் பதில் தீர்மானத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

அந்நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை எந்த நாடுகள் கொண்டு வரும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையிலேயே நட்பு நாடுகள் தீர்மானம் கொண்டு வரும் என கெஹலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளும் சீனா மற்றும் ஒருசில ஆப்ரிக்க நாடுகளும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு